ரூ.1.74 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
வெண்ணந்தூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெண்ணந்தூர்,
வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆர்.புதுப்பாளையம், ஓ.சவுதாபுரம், நடுப்பட்டி மற்றும் அலவாய்பட்டி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையொட்டி ஆர்.புதுப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.74 லட்சம் மதிப்பீட்டில் நொச்சிக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணியினையும், இதே பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.51.69 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.புதுப்பாளையம் முதல் போதமலை வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ள பணியினையும் பார்வையிட்டார்.
ரூ.1.74 கோடியில் வளர்ச்சி பணிகள்
பின்னர் ஓ.சவுதாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.78 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு, நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணி, நடுப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மண்்புழு உரம் தயாரிப்பதற்காக கட்டப்பட்டு வரும் தொட்டி என வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து ஓ.சவுதாபுரம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவு, ஆய்வுக்கூடம், மருந்தகம், ஸ்கேன் அறை, நோயாளிகள் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் அலவாய்பட்டியில் அங்கன்வாடி மையத்தையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, வசந்தி, உதவி பொறியாளர்கள் பழனிச்சாமி, பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.