இந்தி நடிகர் குணால் கெம்முக்கு அபராதம்
ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இந்தி நடிகர் குணால் கெம்முக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
மும்பை, மார்
மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் குணால் கெம்மு. இவர் ஹெல்மெட் அணியாமல் தொப்பி அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றிருக்கிறார். இதை யாரோ படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதையடுத்து மும்பை போலீசார் அவருக்கு அபராதம் விதித்து உள்ளனர்.
இது தொடர்பான இ-செல்லான் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் குணால் கெம்முவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக மும்பை போலீசின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-
நீங்கள் மோட்டார் சைக்கிளை விரும்புகிறீர்கள். நாங்கள் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் விரும்புகிறோம். இதை உணர்ந்து அடுத்த முறை, இதுபோல நடந்து கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு இ-செல்லான் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றதற்காக நடிகர் குணால் கெம்மு மன்னிப்பு கோரி உள்ளார்.
இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் எப்போதும் ஹெல்மட் அணிந்து தான் மோட்டார் சைக்கிள் ஓட்டுவேன். நீண்ட தூரமானாலும், அருகாமையில் உள்ள இடத்திற்கு சென்றாலும் ஹெல்மட் அணியவேண்டும். தவறான முன்னுதாரணமாக இருக்க நான் விரும்பவில்லை, என தெரிவித்து உள்ளார்.
கடந்த மாதம் நடிகர் வருண் தவான், போக்குவரத்து நெரிசலின்போது, காரில் இருந்து வெளியே எட்டி பார்த்தபடி ரசிகை ஒருவருடன் ‘செல்பி’ எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்காக அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.