புதியம்புத்தூர்– குளத்தூர் பகுதிகளில் ஆற்று மணல் கடத்தல்; 4 லாரிகள் பறிமுதல் தப்பி ஓடிய 4 டிரைவர்களுக்கு போலீசார் வலைவீச்சு
புதியம்புத்தூர், குளத்தூர் பகுதிகளில் ஆற்று மணல் கடத்தப்பட்டது தொடர்பாக 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓட்டப்பிடாரம்,
புதியம்புத்தூர், குளத்தூர் பகுதிகளில் ஆற்று மணல் கடத்தப்பட்டது தொடர்பாக 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4 டிரைவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
வாகன சோதனை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாறு ஆற்று பகுதியில் இருந்து சட்ட விரோதமாக லாரிகளில் மணல் ஏற்றி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவருடைய உத்தரவின் பேரில், அந்த லாரிகளை பிடிக்க புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ் தலைமையில் புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரிஹரன், சப்–இன்ஸ்பெக்டர் மாதவராஜ் ஆகியோர் புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 2 லாரிகளை போலீசார் மடக்கி நிறுத்தினர். போலீசாரை கண்டதும் லாரி டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் அந்த லாரிகளை பறிமுதல் செய்து ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராயரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடிவருகின்றனர்.
குளத்தூர்
அதே போல் குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் மற்றும் போலீசார் நேற்று காலையில் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு ஆற்று மணல் கடத்தி வந்த 2 லாரிகளை நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர்கள், வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து போலீசார் அந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர் இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடிவருகின்றனர்.