பாதுகாப்பற்ற முறையில் கியாஸ் மாற்றிய 3 பேர் கைது

வேலூர் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் கியாஸ் மாற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-20 23:39 GMT
வேலூர்,

வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சைதாப்பேட்டை மசூதி தெருவில் சபீருல்லா என்பவர் பாதுகாப்பற்ற முறையில் பெரிய சிலிண்டரில் இருந்து சிறிய சிலிண்டருக்கு கியாஸ் மாற்றிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவரிடமிருந்து சிலிண்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோன்று பாபுராவ் தெருவில் கொணவட்டத்தை சேர்ந்த ரபீக் (வயது 38) என்பவரும், தோட்டப்பாளையத்தில் விரிஞ்சிபுரத்தை சேர்ந்த சபியுல்லா என்பவரும் கியாஸ் மாற்றி உள்ளனர். அவர்களையும் போலீசார் கைதுசெய்து, சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்