இருவேறு இடங்களில் போதைப்பொருள் விற்ற 4 பேர் கைது
இருவேறு இடங்களில் போதைப்பொருள் விற்பனை செய்த 4 பேரை போதைத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடந்து வருவதாக போதைத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனர்.
இதில், அவர்கள் எம்.டி. என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் என்பது தெரியவந்தது. இருவரும் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இதுபோல காட்கோபர் கிழக்கு ராமாபாய் நகர் பகுதியில் போதைக்காக இருமல் மருந்து பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், அவர்கள் ரே ரோடு பகுதியை சேர்ந்த ஹாஜிரத்தாலி கான் (21), பைகுல்லாவை சேர்ந்த முகமது சித்திக் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது.