பாண்டுப்பில் தந்தை, மகன்கள் கொலையில் 3 பேர் கைது

பாண்டுப்பில் தந்தை, 2 மகன்களை கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-03-20 22:40 GMT
மும்பை,

மும்பை பாண்டுப் சோனாப்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அலிகான். இவரது மகன்கள் சவுபாஷ் (வயது25), சதாப் (17). இவர்களுக்கும், அந்த பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட சண்டையில் 4 பேர் அப்துல் அலிகான் மற்றும் அவரது மகன்கள் இரண்டு பேரையும் வாளால் சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன்கள் 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், அப்துல் அலிகான் வீட்டு முன் தள்ளுவண்டிகளை நிறுத்தி வைத்து வியாபாரம் செய்தது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய நவாப், அசிம், குவாசிம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளி உத்தர பிரதேசத்திற்கு தப்பிச்சென்று விட்டதாக கூறினர். இதையடுத்து போலீசார் அந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்