மு.க.ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு: புதுச்சேரியில் தி.மு.க.வினர் சாலை மறியல்
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டசபையில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து தலைமை செயலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் நேற்று தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநில தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் அண்ணா சிலை அருகே வந்ததும் அவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.
இந்த மறியல் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒதியஞ்சாலை போலீசார் சிவா எம்.எல்.ஏ. மற்றும் தெற்கு மாநில தி.மு.க. துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ், நிர்வாகிகள் தைரியநாதன், சக்திவேல் உள்பட சுமார் 150 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் பிற்பகலில் வடக்கு மாநில தி.மு.க.வினர் மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து எஸ்.பி.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார், காந்தி, ஆறுமுகம் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக அவர்கள் செஞ்சி சாலையில் இருந்து அண்ணா சிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.