மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட கட்சியினர் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற செங்குட்டுவன் எம்.எல்.ஏ. உள்பட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்திற்கு வரும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரதயாத்திரையை தடுக்க வலியுறுத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டித்து கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிதா நவாப், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரஜினி செல்வம், முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணத்தில் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கட்சி நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் நடந்த மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 410 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயக்கோட்டையில் ஒன்றிய செயலாளர் அரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர் சாந்தி அரியப்பன், ஊராட்சி செயலாளர் ஜெயசீலன், வர்த்தக அணி சின்னராஜ், நிர்வாகிகள் ஜெயராமன், நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மத்தூர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தி, மக்கள் தொடர்பாளர் ஜிம் மோகன், தொகுதி செயலாளர் தியாகு, தொண்டரணி மாநில செயலாளர் நாசி சரவணன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊத்தங்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் விடுதலை மாநில துணை செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். இதில் மாநில மகளிர் விடுதலை இயக்க ஜெயலட்சுமி, தொண்டரணி மாநில துணை செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா கைது செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் ரியாஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் கிருஷ்ணகிரி தாஜ், காவேரிப்பட்டணம் சல்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊடக பிரிவு மாநில தலைவர் அல்தாப் அகமத் பேசினார்.
இதில் நிர்வாகிகள் நவ்சாத், அலாவுதீன், அம்ஜத், முபாரக், ரிஸ்வான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் ஓசூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பினரை போலீசார் கைது செய்ததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கிருஷ்ணகிரியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் அக்தர்அலி தலைமை தாங்கினார். நகர தலைவர் ஆதாம், நகர துணைத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட அரசியல் கட்சிகளை சேர்ந்த 600 பேரை போலீசார் கைது செய்தனர்.