திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
நாகூர்,
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரையை தமிழகத்தில் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த ரத யாத்திரைக்கு எதிராக போராட சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செல்லும் வழியிலேயே மதுரையில் கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் நாகை மாவட்டம் நாகூர் புதிய பஸ் நிலையத்தில் திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு அனுமதியளித்ததை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுரேஷ், நாகூர் நகர செயலாளர் சண்முகம், நாகை நகர செயலாளர் மணி, நாகூர் நகர துணை செயலாளர் செந்தில், செயற்குழு உறுப்பினர் கண்ணையன், திருமருகல் ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சாலை மறியல்
இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, நாகூர் பழைய பஸ் நிலையத்தில் நாகை - நாகூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நாகூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 10 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். மறியல் போராட்டத்தால் நாகை - நாகூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.