ஸ்டெர்லைட் விரிவாக்க பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மதுரை,
நெல்லை சங்கர்நகரைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் மேலவிட்டான் கிராமங்களில் சிப்காட்-1 தொழில்நுட்ப பூங்கா இயங்கி வருகிறது. சிப்காட் பூங்கா அமைக்கப்படும்போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம். அதோடு மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழும் சான்றிதழ்களைப் பெற வேண்டும்.
தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்குவதற்கு முன்பாக இந்த சான்றிதழ்களைப் பெற வேண்டும். தூத்துக்குடியில் காப்பர் தூய்மைப்படுத்தும் யூனிட்டை ஸ்டெர்லைட் நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்த நிலையில் அந்த யூனிட்டை விரிவாக்கம் செய்வதற்கு முறையான சான்றிதழ்கள் எதுவும் இல்லாமலேயே ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பல்வேறு உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவார்கள். எனவே முறையான அனுமதியின்றி யூனிட்டை விரிவாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுகுறித்து சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குனர், திட்ட அலுவலர், ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை ஏப்ரல் 24-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.