மு.க.ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
விசுவ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்படும் ரதயாத்திரைக்கு அனுமதியளித்த தமிழக அரசை கண்டித்து தி.மு.க. செயல்தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து சட்டமன்றத்தின் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் மேட்டுத்தெருவில் நகர தி.மு.க. செயலாளர் கே.ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம், செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட சுமார் 100 பேரை கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
உத்திரமேரூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஞானசேகரன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், பேரூர் தி.மு.க. செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி சுந்தர், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மூர்த்தி, பேரூராட்சி முன்னாள் தலைவர் சுமதி குணசேகரன் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் உத்திரமேரூர் பஜார் வீதியில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கும்மிடிப்பூண்டி பஜாரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், முன்னாள் ஒன்றிய நிர்வாகி வெங்கடாசலபதி, நகர செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கும்மிடிப்பூண்டி பஸ்நிலையம் அருகே ஜி.என்.டி. சாலையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. வினர் 80 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியலால் கும்மிடிப்பூண்டி பஜாரில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூந்தமல்லி நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் பூந்தமல்லி பஸ் நிலையம் எதிரே டிரங்க் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் பூந்தமல்லி ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சென்னீர்குப்பம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னேரியில் பொன்னேரி நகர தி.மு.க. செயலாளர் விசுவநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் மாவட்ட சிறுபான்மை நல அமைப்பாளர் மகிமைதாஸ், நேதாஜி, முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன்.பாண்டியன், ஏகாம்பரம், பரசுராமன் என 100-க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அவர்கள் திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையான ஆயில்மில் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் ஒன்றன்பின் ஒன்றாக நீண்டதுாரம் அணிவகுத்து நின்றன.
அங்கு விரைந்து வந்த போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் 160 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அதே போல திருவள்ளூர் உழவர் சந்தை பகுதியில் தி.மு.க. திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் தேவன், குப்பன் என 110 பேர் உழவர் சந்தை பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல திருவள்ளூரை அடுத்த காக்களூரில் திருவள்ளூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயசீலன் தலைமையில் 125 பேர் ஸ்டாலின் கைது செய்த சம்பவத்தை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து அங்கு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அதேபோல மணவாளநகர் சந்திப்பு பகுதியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், விவசாய அணி துணை அமைப்பாளர் ஆதிசேஷன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகிகளை போலீசார் மாலையில் விடுவித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெரியபாளையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரே தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவருடன் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சங்கர், துணை அமைப்பாளர் அப்புன், ஒன்றிய அவைத்தலைவர் ரவிசந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சம்பத், ரவி, வக்கீல் அணியை சேர்ந்த சீனிவாசன், முனுசாமி உள்பட 30 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.