காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், டெல்டா விவசாயிகளை காத்திட வேண்டும், பெட்ரோல்- டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாவட்ட தலைவர்கள் ஜெயராஜ், கிரிநாராயணன், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஹரிபாபு வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் ஜெயமூர்த்தி, மாநில செயலாளர் பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் இசைமாறன், பார்த்திபன், வெங்கடபதி, பொருளாளர் சதீஷ்பாபு, எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட தலைவர் அய்யனார், இளைஞர் அணி துணைத்தலைவவ் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் இளைஞர் அணி துணைத்தலைவர் செல்வமுத்துக்குமரன் நன்றி கூறினார்.