விசுவ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த சென்ற திருமாவளவன் கைது
தமிழகம் வந்த விசுவ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தச் சென்ற திருமாவளவனை திருமங்கலம் அருகே போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்,
விசுவ இந்து பரிஷத் ரத யாத்திரை கேரளாவில் இருந்து நேற்று தமிழகம் வந்தது. இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக காரில் செங்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். கார் திருமங்கலம், செங்கோட்டை சாலையில் டி.கல்லுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசிவம் தலைமையில் போலீசார் திருமாவளவனை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களை வாடிப்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் திருமாவளவன் கூறியதாவது:-
விசுவ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக அரசு அந்த ரத யாத்திரைக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. ஜனநாயக உரிமையின்படி எதிர்ப்பு தெரிவித்த எங்களது கருத்தை பதிவு செய்ய தமிழக அரசு மறுத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போராட்டத்திற்கு புறப்பட்டவர்களை எல்லாம் முன்எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் ஆங்காங்கே கைது செய்து வருகின்றனர். இது மத வெறி அரசியலுக்கு துணை போகிற செயல். ஜனநாயக குரல் வளையை நெரிக்கின்ற செயல். மத நல்லிணக்கம் உள்ள தமிழ்நாட்டில் மதவெறி அரசியலை விதைக்கும் உள் நோக்கத்தோடு திட்டமிட்டு தமிழகத்தை குறி வைத்து பயணிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கூட சென்னை, விழுப்புரம், கடலூர் என்று வராமல் தென் மாவட்டங்களை அவர்கள் குறி வைத்து பயணிப்பது தென்மாவட்டங்களில் மத வாத அரசியலுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்று கருதுகிறார்கள். ராமேசுவரம் சென்று இந்த பயணம் முடிவடைவதாக தெரிகிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.