ராமராஜ்ய ரத யாத்திரையை தடைசெய்யக்கோரி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் போராட்டம்

தமிழகத்தில் ராமராஜ்ய ரதயாத்திரையை தடை செய்யக்கோரி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் என 345 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-03-20 23:00 GMT
அரியலூர்,

ராமராஜ்ய ரதயாத் திரையை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவரது கைதை கண்டித்து பெரம்பலூரில் புதிய பஸ்நிலையம் முன்பு தி.மு.க.வினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராமராஜ்ய ரதயாத்திரையை தடை செய்ய தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதில் மாவட்ட கழக செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில், தி.மு.க.வினர் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் வல்லபன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டதாக 75 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். கைதான அனை வரும் பின்பு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதேபோல ஸ்ரீவில்லிபுத் தூரில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதே போல், ராமராஜ்ய ரதயாத்திரையை தடை செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது ரதயாத்திரையை தடை செய்ய முன்வராத தமிழக அரசுக்கு கண்டம் தெரிவித்தும், ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி கைதான அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்கக்கோரியும் வலி யுறுத்தினர். இதையடுத்து போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியினருடன் இணைந்து ம.தி.மு.க.வினர் பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மக்களிடையேயான நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் வகையிலுள்ள அந்த ரதயாத்திரையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

பெரம்பலூரில் நடந்த சாலை மறியல் போராட்டங் களில் அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்பினர் உள்பட 148 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேகோரிக்கையை வலி யுறுத்தியும்,புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும் அரியலூர் பஸ்நிலையம் முன்பு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மற்றும் போலீசார், தி.மு.க. வினர் 60 பேரை கைது செய்தனர்.

இதேபோல் ரதயாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் மறியல் போராட்டம் நடத்திய அக்கட்சியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமானூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் (கிழக்கு) கென்னடி தலைமையில், கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 80 பேரை திருமானூர் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இதேபோல் ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி இணை செயலாளர் சுபாசந்திரசேகர் தலைமையில் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் இலக்கியதாசன், தி.க. மண்டல இளைஞரணி செயலாளர் வக்கீல் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சவுகத்அலி உள்பட மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக் கப்பட்டனர் 

மேலும் செய்திகள்