தமிழகத்தில் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும்
தமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் முழு நேர கிளை நூலகத்தின் முப்பெரும் விழா வாசகர் வட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். பொது நூலக திட்ட இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் திட்ட விளக்க உரையாற்றினார்.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் பிரிவில் இந்திய சைகை மொழி அகராதி, பேசுவதை எழுத்தாக மாற்றும் செயலி, வேலைவாய்ப்பு செய்திகளுக்கான செயலி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். நூலக நன்கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டைகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது.
மாவட்ட தலைநகரங்களில் 32 நூலகங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வாசகர் வட்டத்தினர் கேட்டு கொண்டதின் பேரில் திருவொற்றியூர் கிளை நூலகத்தில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் குறித்து தஞ்சாவூரிலும், நாட்டு புறக்கலைகள் சார்ந்து மதுரையிலும், தமிழ் மருத்துவம் தொடர்பாக திருநெல்வேலியிலும், பழங்குடியினர் பண்பாடு குறித்து நீலகிரியிலும், கணிதம் அறிவியல் பற்றி திருச்சியிலும், வானியல், புதுமை கண்டுபிடிப்புகள் சார்ந்து கோவையிலும், அச்சு கலை தொடர்பாக சென்னையில் சிறப்பு நூலகங்களும், சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங் கள் பற்றிய சிறப்பு நூலகம் மற்றும் காட்சி கூடம் சிவகங்கை மாவட்டம் கீழடியிலும் அமைக்கப்படும். இதற்காக இந்த 8 இடங்களிலும் தலா ரூ.1 கோடி செலவிடப்படும்.
தமிழகத்தில் உள்ள நூலகங்களில் 7,28,694 உறுப்பினர்களும் 1,17,278 புரவலர்களும் உள்ளனர். உலக புத்தக தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதிக்குள் மேலும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், பொது நூலக இயக்குனர் சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.