காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பெரம்பலூர், அரியலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளை ஞரணி தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணஜனார்த்தனன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் கட்டுமான பணி தேக்கம் மற்றும் மணல் தட்டுப்பாடு ஆகியவற்றை உடனே சரி செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு 2 ஆண்டுகால நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணை தலைவர்கள் ஸ்டாலின், குமார் உள்பட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்மாநில காங் கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் குமார் என்கிற நடராஜன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கொள்ளிடம்-மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து கிராமங்களிலுள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்வழி பாதையிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கைலாசம், சுப்ரமணியன், வீர ரவி, வக்கீல் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.