கோவை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்படும் வாரச்சந்தைகளை மூட வேண்டும், கலெக்டரிடம் வியாபாரிகள் மனு
கோவை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்படும் வாரச்சந்தைகளை மூட வேண்டும் என்று வியாபாரிகள் கலெக்டர் ஹரிகரனை சந்தித்து மனு கொடுத்தனர்.
கோவை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் முத்துராஜ், தலைமை பேச்சாளர் நாராயணன் மற்றும் வாரச்சந்தை சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஆர்.ஜெகன்மோகன், செயலாளர் எம்.ராமமூர்த்தி மற்றும் ஏராளமான சிறு வியாபாரிகள் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் ஹரிகரனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் திங்கட்கிழமை துடியலூரிலும், செவ்வாய்க்கிழமை வெள்ளலூரிலும், புதன்கிழமை கோவில்பாளையத்திலும், வியாழக்கிழமை சிறுமுகையிலும், வெள்ளிக்கிழமை காரமடையிலும், சனிக்கிழமை அன்னூரிலும், ஞாயிற்றுக்கிழமை பெரியநாயக்கன்பாளையத்திலும் வாரச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அனுமதி பெற்று அதற்கான முன்வைப்புத்தொகையை செலுத்தியே வாரச்சந்தையை சிறு வியாபாரிகள் நடத்தி வருகிறார்கள். இந்த சந்தையில் சுமார் 900 வியாபாரிகள் மூலம் காய்கறி முதல் அனைத்து வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரச்சந்தையை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் மறைமுகமாக பயன்பெற்று வரு கிறார்கள்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் உள்ளாட்சி நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல் திடீர் திடீரென்று ஆங்காங்கே வாரச்சந்தைகள் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் நாங்கள் சந்தை நடத்தும்போது அங்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடுகிறது. அத்துடன் அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டிய முன்வைப்பு தொகையும் செலுத்துவது கிடையாது.
இது தொடர்பாக அவர்களிடம் சென்று கேட்டால் முறையான பதிலை தெரிவிக்காமல், எங்களிடம் தகராறு செய்கிறார்கள். கோவை மாவட்டத்தில் திடீரென்று முளைக்கும் சந்தைகளால் எங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் வாரச்சந்தைகளை உடனடியாக மூட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கலெக்டரை சந்தித்து மனு கொடுத்த பின்னர் கோவை வாரச்சந்தை சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஆர்.ஜெகன்மோகன் நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்கள் கோரிக்கையை கலெக்டரிடம் தெரிவித்தோம். அதை தெளிவாக கேட்ட அவர், பல ஆண்டு களாக தொடர்ந்து நடந்து வரும் வாரச்சந்தையை மூடக்கூடாது. எனவே அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் சந்தைகளை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்’ என்றார்.