லால்குடியில் ரவுண்டானா அமைக்கும் பணிக்கு இடையூறு: ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
லால்குடியில் ரவுண்டானா அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
லால்குடி,
லால்குடியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கடந்த 2010-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.20½ கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 5 ஆண்டு கால தாமதத்திற்கு பின்பு அணுகுசாலை மற்றும் மேம்பால பணிகள் முடிவடைந்தன. ஆனால் இந்த பாலம் அரசு அனுமதியுடன் முறையாக திறக்கப்படாமல் இருப்பதாலும், பாலத்திட்டத்தின்படி ஒரு பகுதியான ரவுண்டானா அமைக்கும் பணிக்கு இடையூறாக நான்கு ரோடு பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்ததாலும் ரவுண்டானா அமைக்கும் பணி தடைபட்டுக்கொண்டே வந்தது. இந்நிலையில் தனித்தனி பிரிவுகளாக இருந்த இந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வழக்காக விசாரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் நீதிமன்றத்தை நாடாமல் முறைப்படி உரிய இழப்பீடு பெறப்பட்ட 25 கடைகள் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் தடை கேட்ட லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 12 கடைகள், வருவாய்த்துறைக்கு சொந்தமான 19 கடைகள், வக்பு வாரியம் வசம் இருக்கும் கடைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான சில இடங்கள் ஆகிய அனைத்தையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி நேற்று காலை 7½ மணியளவில் லால்குடி கோட்டாட்சியர் கோவிந்தராஜூலு, வட்டாட்சியர் ராகவன், பேரூராட்சி செயல்அலுவலர் குமரன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துசாமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் லால்குடி சிறுதையூர் நான்கு ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. 5 பொக்லைன் எந்திரங்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆக்கிரமிப்பின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) கோடிலிங்கம் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், விஜயா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், சரவணகுமார், ரேணுகா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.