தனியார் ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படுவதை கண்டித்து அம்பையில் தி.மு.க.வினர் சாலை மறியல்; 300 பேர் கைது
தாமிரபரணி தண்ணீர் தனியார் ஆலைகளுக்கு வழங்கப்படுவதை கண்டித்து அம்பையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
அம்பை,
தாமிரபரணி தண்ணீர் தனியார் ஆலைகளுக்கு வழங்கப்படுவதை கண்டித்து அம்பையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க.வினர் சாலை மறியல்
அம்பை பூக்கடை பஜாரில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நேற்று காலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கசமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பை நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர், விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டிய தண்ணீர் தனியார் ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது. இதை தடுக்க தவறிய தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
300 பேர் கைது
மறியலில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, நிர்வாகிகள் சித்திக், ராஜம்ஜான், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சிவகுருநாதன், ஆறுமுகம், மாரிவண்ணமுத்து, குமார், மாரியப்பன், ராஜன், தங்கப்பாண்டியன், நகர செயலாளர்கள் கணேசன், இசக்கிபாண்டியன், அப்துல்ரகுமான், முருகேசன், குமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரன் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன் வடிவேல், ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சுடலைமணி, ம.தி.மு.க. சேர்ந்த சிவானந்தம், முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 300 பேரை அம்பை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்த னர். மறியல் போராட்டம் காரணமாக அம்பையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.