காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி த.மா.கா. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி த.மா.கா. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாநில அரசு அனைத்துக்கட்சிகளையும் இணைத்து மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும், தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்வதை கைவிட்டு, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், குமரி மாவட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ள பெரும்பாலான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. இளைஞர் அணி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜெ.சிவபிரபு தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் ஜெகநாதராஜ், துணைத்தலைவர் செல்வன், மேற்கு மாவட்ட தலைவர் தேவ், நகர இளைஞர் அணி தலைவர் டைசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் டாக்டர் பினுலால்சிங் தொடங்கி வைத்தார். மூத்த துணைத்தலைவர் குமாரதாஸ் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் பொன்.மாதவன், பிரபா, செந்தூர்பாண்டி, லீனஸ், அஜிகுமார், வர்க்கீஸ், லிங்கேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.