தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே ரூ.77 லட்சம் செலவில் படகு குழாம் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்
தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே, ரூ.77 லட்சம் செலவில் படகு குழாம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே, ரூ.77 லட்சம் செலவில் படகு குழாம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
படகு குழாம்
தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் மனதை கவரும் வகையிலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட ரோச் பூங்கா அருகே படகு குழாம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.77 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்த மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பரிந்துரை செய்தார். அதன்பேரில் வ.உ.சி. துறைமுகத்தின் மூலம் படகு குழாம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
விளையாட்டு பொருட்கள்
இதனால் கடல் சார்ந்த இயற்கையை பொதுமக்கள் கண்டு ரசிக்கவும், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து படகு சவாரி செய்வதற்கும் அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது. குழந்தைகளின் மனதை கவரும் வகையில் விளையாட்டு பொருட்கள், மற்றும் சிற்றுண்டி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் இடமாகவும் படகு குழாம் அமைய உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.