திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்

திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

Update: 2018-03-19 22:00 GMT
பவானிசாகர்,

திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இது 27 கொண்டைஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதை வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

திம்பம் மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. பகல் நேரங்களிலேயே பனிமூட்டம் நிலவி வருகிறது.

நேற்று காலை திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மெதுவாக இயக்கினார்கள். போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாததால் வாகனங்களில் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

காலை 9.30 மணி அளவில் பனிமூட்டம் விலகி வெயில் அடிக்க தொடங்கியது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்