இன்னும் 2 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்
இன்னும் 2 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என விசுவ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் கூறினார்.;
கும்பகோணம்,
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம். அதேபோல ஓய்வு பெறும் நிலையில் உள்ள கோவில் பூசாரிகள் 100 பேருக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்க உள்ளோம்.
தமிழகத்தில் சமீப காலமாக தனி தமிழ்நாடு, திராவிட நாடு என பிரிவினைவாதம் பேசுகின்றனர். ஏற்கனவே மொழிவாரியாக மாநிலங்களை பிரித்ததால் தான், காவிரி பிரச்சினை இன்றளவும் நீடிக்கிறது. அன்னிய பிரிவினை சக்திகள் தமிழ்நாட்டை பிரிக்க மக்களை திசை திருப்புகின்றனர்.
கமல்ஹாசனின் அரசியல் பேச்சில், அமெரிக்காவின் பிரிவினைவாத சக்தி வெளிப்படுகிறது. தமிழ்நாட்டை மட்டுமின்றி நம் நாட்டையே துண்டாட அமெரிக்கா சதி செய்கிறது. 1947-ம் ஆண்டு நாம் பெற்ற சுதந்திரத்தை மொழிவாதிகளும், சுயநல வாதிகளும் பறித்து விடுவார்களோ என்ற கவலை உள்ளது.
திராவிட நாடு, தனி தமிழ்நாடு ஆகிய கோரிக்கைகளால் தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும். இந்த நிலையை அரசியல்வாதிகள் ஆழமாக சிந்தித்து உணர வேண்டும். தனி தமிழ்நாடு என்பதை அனுமதிக்கவே கூடாது. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு உரிய உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு, 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு அளித்த அவகாசம் முடிவடைய இன்னும் 2 வாரங்கள் தான் உள்ளன. எனவே மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில அரசுகளும் குடிநீர் தேவை, விவசாய சாகுபடி குறித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.