ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் திருநகரை சேர்ந்த பிரபல ரவுடி பன்னீர்செல்வம் (வயது 35) கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பலூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் துறைமங்கலம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த நகுலேஷ்வரன் (26), கே.கே.நகரை சேர்ந்த வினோத் (23), துறைமங்கலத்தை சேர்ந்த கபிலன் (22) உள்ளிட்டோரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நகுலேஷ்வரன், வினோத், கபிலன் மீது குற்ற வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இதைதொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த அந்த 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் பரிந்துரை செய்தார். அதன் பேரில் நகுலேஷ்வரன் உள்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் சாந்தா உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நகுலேஷ்வரன், வினோத், கபிலன் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை பெரம்பலூர் போலீசார் வழங்கினர்.