பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது

பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது.

Update: 2018-03-19 22:15 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். தற்போது அவர் பொதுத்தேர்வும் எழுதி வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ந் தேதி முதல் அந்த மாணவியை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் நெய்குப்பையை சேர்ந்த சின்னதுரை (வயது 22) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மாணவியை கடத்தியதாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப் படையில் மாணவியை போலீசார் மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் சின்னதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்