பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தில் குழி தோண்டுதல், மின் கம்பம் நடுதல், மின் கம்பங்களை எடுத்து செல்லுதல் அவசர வேலைகளை செய்தல் போன்ற பணிகளை செய்வதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள், தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.380 வழங்க உத்தரவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மின்வாரிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சரவணன் தலைமை தாங்கினார். இதில் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது ‘தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறோம். தானே, வர்தா, ஒகி உள்ளிட்ட புயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை அகற்றுதல், மின் கம்பங்களை நடுதல் உள்ளிட்ட பணிகளை நாங்கள் செய்தோம். அந்த பணி முடிந்ததும் எங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று (நேற்று) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்’ என்றார்கள்.