காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
கன்னியாகுமரி அருகே காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மற்றும் மானிய விலையில் விற்கப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஆனாலும், கடத்தல்காரர்கள் சொகுசு கார், அரசு பஸ் என நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் நேற்று கன்னியாகுமரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம் நோக்கி ஒரு கார் சென்றது. அந்த காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே, அதிகாரிகள் தங்களது ஜீப்பில் காரை துரத்தி சென்றனர்.
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் சென்ற போது காரை நிறுத்திவிட்டு அதில் இருந்த 2 பேர் இறங்கி தப்பி ஓடினர். தொடர்ந்து, அதிகாரிகள் காரை சோதனை செய்த போது அதில் சிறு சிறு மூடைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய 2 பேர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.