கொலை வழக்கில் தேடப்பட்டு 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

ராஜபாளையத்தில் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-03-19 22:15 GMT
விருதுநகர்,

ராஜபாளையத்தில் கடந்த 1.4.1992 ல் சுந்தரராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பாலன் என்கிற பாலேந்திரன் (வயது 54) என்பவர் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

 இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு பாலேந்திரன் தேடப்பட்டு வந்தார். அவர் தளவாய்புரம் அருகில் உள்ள ஆசில்லாபுரத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸ் அதிகாரி மணிகண்டனுக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாலேந்திரனை கைது செய்த போலீஸ் அதிகாரி மணிகண்டனை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்