அ.காளாப்பூரில் சேதமடைந்த மின்கம்பம், தடுப்பு கம்பிகள் சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் சேதமடைந்து காணப்படும் மின்கம்பம் மற்றும் சாலையோர தடுப்பு கம்பிகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.;
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் அ.காளாப்பூர் என்ற பகுதியில் பாலாற்று குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகில் சாலையோரத்தில் பாதுகாப்பிற்காக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தடுப்பு கம்பிகள் மீது வாகனங்கள் மோதியதில் அவை சேதமடைந்தும், வளைந்தும் காணப்படுகிறது. சில கம்பிகள் சாலையை நோக்கி நீட்டியவாறு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அ.காளாப்பூர் பாலத்தின் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று பாலாற்று பாலத்தின் அருகில் சாலையோரத்தில் உள்ள 3 மின் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுவதுடன், அவை எப்போது வேண்டுமானாலும் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் சாலையை கடந்து சென்று வருகின்றனர்.
இதுகுறித்து அ.காளாப்பூரை சேர்ந்த விவசாயி சந்திரன் கூறும்போது, அ.காளாப்பூர் பாலாற்று அருகில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து கடந்த 5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. அவற்றில் ஒரு மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து கட்டிட கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதேபோன்று அப்பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகளும் சேதமடைந்து உள்ளது. எனவே இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.