மத்திய நிறுவனத்தில் அதிகாரி வேலை
ஒலிபரப்பு பொறியியல் நுட்ப நிறுவனம் சுருக்கமாக பி.இ.சி.ஐ.எல். எனப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனமான பி.இ.சி.ஐ.எல்.-ல் தற்போது ‘பேஷன்ட் கேர் மேனேஜர்’ மற்றும் ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 131 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பேஷன்ட் கேர் மேனேஜர் பணிக்கு 35 இடங்களும், ஒருங்கிணைப்பாளர் (பேஷன்ட் கேர்) பணிக்கு 96 இடங்களும் உள்ளன. இது தற்காலிக பணியிடங்களாகும்.
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலாளர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-4-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். http://www.becil.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.