வேலூரில் பாலாற்று புதை மணலில் சிக்கி கட்டிட மேஸ்திரி பலி

வேலூரில் பாலாற்று புதை மணலில் சிக்கி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-03-18 22:00 GMT
வேலூர், 

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.

சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் அடிபகுதியில் உள்ள பாலாற்றில் ராஜா குளித்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக புதை மணலில் சிக்கி கொண்டார். இதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வேலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று புதை மணலில் சிக்கிய ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்