மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்தது பால் பாக்கெட், தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய புதிய திட்டம்
மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. பால் பாக்கெட், தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.
மும்பை,

பிளாஸ்டிக் தடை
மராட்டியத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு குடிபட்வா தினமான நேற்று முதல் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்படி பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், கரண்டிகள் என பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டன. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதற்கிடையே பால் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அவற்றை மறுசுழற்சி செய்ய அரசு அனுமதி அளித்தது.
புதிய திட்டம்
இந்த நிலையில் பால் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, பொதுமக்கள் பால் பாக்கெட்டுகள் வாங்கும் போது 50 பைசா கூடுதலாகவும், தண்ணீர் பாட்டில் வாங்கும் போது ரூ.1 கூடுதலாகவும் செலுத்த வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட பிறகு காலியான பாட்டில்கள் மற்றும் பால்பாக் கெட்டுகளை அவற்றை வாங்கிய கடைக்காரரிடமே ஒப்படைத்துவிட்டு அவர்களிடமிருந்து தாங்கள் கூடுதலாக செலுத்திய பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை சாலைகளில் வீசிச்செல்வது குறையும் என அகில இந்திய பிளாஸ்டிக் கழக தலைவர் ஹிதன் பேடா தெரிவித்தார்.