பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-03-18 21:36 GMT
மும்பை,

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை

மும்பை தாதர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் போலீஸ்காரர் சைலேஷ் கதம் என்பவர் வசித்து வருகிறார். அதே கட்டிடத்தில் 30 வயது பெண் ஒருவர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் போலீஸ்காரர் சைலேஷ் கதம் கடந்த ஆண்டு ஒரு விதவை பெண்ணை மானபங்கம் செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தார். இதுதவிர பல்வேறு புகார்கள் காரணமாக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில், மேற்படி கடை நடத்தி வரும் பெண்ணின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியும், ஆபாசமாக சைகைகள் காட்டியும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

போலீஸ்காரர் கைது

இதுபற்றி அந்த பெண் போய்வாடா போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் அம்பிகாவிடம் சென்று முறையிட்டார். அவரது உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைலேஷ் கதமை தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்