கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகை திருட்டு

வத்தலக்குண்டுவில், கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்கநகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-03-18 21:15 GMT
வத்தலக்குண்டு,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மஞ்சள் ஆறு அருகே பத்திரப்பதிவு அலுவலகம் ஒட்டி லட்சுமிநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் இருந்து வருகிறார். நேற்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல் கோவிலில் பூஜைகள் செய்தார்.

பின்னர் கோவிலின் கருவறையை பூட்டி வீட்டு அருகே உள்ள தனது வீட்டுக்கு பிரசாதம் எடுப்பதற்காக சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கருவறை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி சென்றார். கருவறைக்குள் சென்று பார்த்த போது மூலவரான லட்சுமி கழுத்தில் இருந்து 3 பவுன் தாலிசங்கிலி திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோவிந்தராஜ் வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். மர்மநபர்கள் கருவறையின் பூட்டை நெம்பி உடைத்து தாலிச்செயினை திருடி சென்றது தெரியவந்த்து.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்கசங்கிலியை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பொதுமக்கள் கூடும் அதிகமுள்ள இந்த பகுதிகளில் பட்டபகலில் மர்மநபர்கள் தாலிச்சங்கிலியை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்