காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை மத்தியஅரசு வஞ்சிக்கிறது ஆர்.எஸ்.பாரதி பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை மத்தியஅரசு வஞ்சிக்கிறது என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் தி.மு.க. வக்கீல்கள் அணி ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தலைமை தாங்கினார். தி.மு.க. சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் கிரிராஜன், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாட்டில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து திரளாக வக்கீல்கள் கலந்து கொள்ள வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்தவிதமான உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காத மாநிலஅரசையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் உரிய காலத்திற்குள் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய தயார் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ்கிருஷ்ணசாமி, சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் து.செல்வம், நீலமேகம், மாவட்ட வக்கீல்கள் அணி அமைப்பாளர்கள் ராம.சண்முகசுந்தரம், விஜயகுமார், வக்கீல்கள் நமச்சிவாயம், நாகராஜன், சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்தியஅரசு விளையாடிக் கொண்டு இருக்கிறது. மத்தியஅரசின் அரசியல் நாடகத்தை பார்த்து உலகமே சிரிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எம்.பி.க்களின் போராட்டத்தினால் 10 நாட்களாக பாராளுமன்றம் நடைபெறவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என எந்த உறுதியையும் மத்தியமந்திரிகள் அளிக்க மறுக்கின்றனர்.
இது தமிழகத்தை வஞ்சிக்கக்கூடியது. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா? என அமைச்சர்கள் பதில் தெரிவிப்பது எதற்காக என்றால் பதவி போய்விட்டால் வசூல் செய்ய முடியாது என்ற காரணத்திற்காக தான். மேல்சபை எம்.பி.க்கள் தான் தி.மு.க.வில் உள்ளனர். லோக்சபாவில் தி.மு.க. எம்.பி.க்கள் இருந்திருந்தால் ராஜினாமா செய்து இருப்போம். லோக்சபா எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் தான் தேர்தல் வரும். மக்கள் நல்ல தீர்ப்பை அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.