சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
குடவாசல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செம்பியன் கூந்தலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளி அருள்தாஸ் (43) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவர், மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து செல்வதாக சிறுமியிடம் கூறினார். ஆனால் அந்த சிறுமி மோட்டார்சைக்கிளில் ஏற மறுத்துவிட்டார். இதையடுத்து அருள்தாஸ், அந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கைது
இதுபற்றி சிறுமி தனது தந்தையிடம் கூறினார். பின்னர் எரவாஞ்சேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள்தாஸ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.