மயிலாடுதுறை பகுதியில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம்

மயிலாடுதுறை பகுதியில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2018-03-18 22:30 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே மகாராஜபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சபீதாதேவி தலைமை தாங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் இளம்பரிதி, கிராம நிர்வாக அலுவலர்கள் புவனேஸ்வரி, அருள்ராஜ், கவுசல்யா மற்றும் அலுவலர்கள், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் - நீக்குதல், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பரிசீலனை செய்து பெற்று கொண்டனர். இதில் தகுதி உள்ள மனுக்கள் உடனே ஏற்று கொள்ளப்பட்டன. தகுந்த ஆவணங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப் பட்டன.

குத்தாலம் அருகே பழைய கூடலூரில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வட்ட வழங்கல் அலுவலர் ராகவன் கலந்து கொண்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்-நீக்குதல், வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதி உள்ள மனுக்கள் உடனே ஏற்கப்பட்டு, தகுந்த ஆவணங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முகாமில் வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் சுவாமிநாதன், சுருளிவேல், கோபாலன், ஊராட்சி எழுத்தர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொறையாறு அருகே ஈச்சங்குடி ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி மண்டல துணை தாசில்தார் மகேந்திரன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். முகாமில் பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவி தொகை, வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சவுரிராஜன் நன்றி கூறினார்.

திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நாகலட்சுமி தலைமை தாங்கினார். முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் தாழம்பேட்டை, வேப்பஞ்சேரி, திருமெய்ஞானம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். முகாமில் வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்கடையூர் அருகே காலமநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தேர்தல் துணை தாசில்தார் பாபு தலைமை தாங்கினார். முகாமில் குமாரக்குடி, சங்கேந்தி, சின்னமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் கொடுத்தனர். இதில் வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்