மோட்டார் சைக்கிள்- டெம்போ மோதல்; தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள்- டெம்போ மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-03-18 22:15 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொம்மராஜுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 13-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் பொம்மராஜுப்பேட்டையில் இருந்து பென்னலூர்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினி டெம்போ அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகள் தேவி (26) பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்