வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
துபாய், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் வெளிநாட்டு விமானங்களில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த நசிராபானு (வயது 36) என்பவர் வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் 170 தங்க பொத்தான் வளையங்கள் இருந்தன. ரூ.12 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் எடை இருந்த அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சாய் வினோத்குமார் (30) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி உடமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த ஜுனைத் (27) என்பவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தார்கள் என 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.