அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.விற்கு ரகசிய உடன்பாடு டி.ராஜேந்தர் பரபரப்பு பேட்டி
அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.விற்கு ரகசிய உடன்பாடு டி.ராஜேந்தர் பரபரப்பு பேட்டி.;
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழகாவட்டாங்குறிச்சியில் லட்சிய தி.மு.க. சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் வினோத்ராஜ் தலைமை தாங்கினார். இதைதொடர்ந்து லட்சிய தி.மு.க. கட்சி தலைவர் டி.ராஜேந்தர், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர், தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஸ்டாலினுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது. அதனால் தான் ஸ்டாலின் கல்லூரிக்கு செல்வது போல சட்டசபைக்கு சென்று வருகிறார். டி.டி.வி. தினகரன் ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திராவிடத்தையும், அண்ணாவையும் சேர்க்காதது கண்டனத்துக்கு உரியது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி எனக்கு நல்ல நண்பர், இரட்டை இலை சின்னம் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர். தற்போது காவிரி பிரச்சினைக்காக எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லும் ஸ்டாலின், மத்திய அரசியலில் தி.மு.க. அங்கம் வகித்த போது இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, ராஜினாமா செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் கட்சியை வளர்க்க தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.