விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்,
தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்கள் குருசாமி, நல்லசாமி, தனபதி ஆகியோர் நேற்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:–
விவசாயிகளுக்கு போதிய வருமானம் இல்லாததால், வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், கடனை திருப்பி செலுத்தாதவர்களின் வீடு, டிராக்டர், நிலத்தை ஜப்தி செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். வேளாண் கடன் நிவாரண சீர்திருத்த நிதியம் உருவாக்கி, விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.13 ஆயிரத்து 450 கோடி ஒதுக்கி உள்ளது. இதன்மூலம் நவீன குளிர்பதன சேமிப்பு கிட்டங்கிகள், சந்தைகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், வேளாண் வணிகத்தில் ஈடுபடும் கார்பரேட் நிறுவனங்களுக்கே உதவும். சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்படாது.
ஏற்கனவே, விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்கும் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகைகளை பெற்று கொடுக்க வேண்டும்.
நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை மக்களிடம் எடுத்துச்சொல்லும் வகையில் அடுத்த மாதம் (ஏபரல்) 5–ந்தேதி முதல் மே 1–ந்தேதி வரை கிராமங்கள் தோறும் பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதையடுத்து, மே 2–ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜூன் மாதம் 4–ந்தேதி அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து பிரமாண்ட பேரணியுடன் சென்று சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.