கோவில்பட்டியில் பலத்த மழை

கோவில்பட்டியில் நேற்று பலத்த மழை பெய்தது.

Update: 2018-03-17 21:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நேற்று பலத்த மழை பெய்தது.

வெயில்

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத் தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. தூத்துக்குடியில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 200 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு கடந்த 2 நாட்களாக மழை பெய்யவில்லை. வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.

திடீர் மழை

இந்த நிலையில், கோவில்பட்டியில் நேற்று திடீரென மழை பெய்தது. மதியம் 2.20 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த மழையால் சாலைகள், தெருக் களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோவில்பட்டி மெயின் ரோடு, புதுரோடு சந்திப்பு பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

டி.வி.க்கள் சேதம்


பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ததால் சில வீடுகளில் மின்கசிவு காரணமாக ஒயர்கள் எரிந்து சேதம் அடைந்தன. சில வீடுகளில் டி.வி.க்களும் சேதம் அடைந்தன.

மேலும் செய்திகள்