வாசுதேவநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வாசுதேவநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-03-17 21:00 GMT
வாசுதேவநல்லூர்,

வாசுதேவநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் வாசுதேவநல்லூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை உறுப்பினர் ராஜகோபால் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் ராமசுப்பு, மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த குலாம் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்

விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் ரேஷன் கடைகளை திறந்து வைத்திருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை தினந்தோறும் வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, பருப்பு, பாமாயில் வழங்க வேண்டும். புதிய ரேஷன் கார்டுகளுக்கும் மண்எண்ணெய் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்க கடைகளை நீக்கி விட்டு, அரசு நியாய விலைக்கடைகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் மருதையா, பழனியம்மாள், முருகையா, சின்னத்தாய், மாரியம்மாள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், அமுதா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்