வனத்துறை தடையால் மலைப்பாதை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்
வருசநாடு அருகே வனத்துறையினர் தடையால் மலைப்பாதை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடமலைக்குண்டு,
வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் காந்திகிராமம், மேல்வாலிப்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமங்களை சுற்றிலும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமங்களுக்கு மலைப்பாதை வசதி இல்லை. சீலமுத்தையாபுரம் கிராமம் வரை மட்டுமே செல்ல பாதை அமைந்திருந்தது. சீலமுத்தையாபுரம் கிராமத்தை கடந்து காந்திகிராமம் வரை சுமார் 5 கிலோமீட்டர் வரை மண் பாதை மட்டுமே அமைந்திருந்தது. இந்த பாதை குண்டும், குழியுமாக காணப்பட்டதால் காந்திகிராமத்திற்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை.
எனவே இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் மாட்டு வண்டியை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். விளைபொருட்களை சீலமுத்தையாபுரம் வரை மாட்டு வண்டிகளில் எடுத்து வந்து அதன் பின்னர் லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சந்தைகளுக்கு அனுப்பி வந்தனர்.
இந்த கிராமங்களுக்கான ரேஷன் கடை 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தும்மக்குண்டு கிராமம் அமைந்துள்ளது. எனவே அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கி அதனை தலைச்சுமையாகவோ அல்லது மாட்டு வண்டிகளில் வைத்தோ கிராமங்களுக்கு எடுத்து சென்றனர். இந்த கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் மாணவ-மாணவிகளை வெளியூர்களில் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.
இதுபோன்ற காரணங்களாக காந்திகிராமம் வரை புதிய தார்சாலை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீலமுத்தையாபுரம் முதல் காந்திகிராமம் வரை புதிய மலைப்பாதை அமைக்க அரசு உத்தரவிட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து சீலமுத்தையாபுரம் கிராமத்தில் இருந்து சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டன. சுமார் 3 கிலோமீட்டருக்கு சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. மீதமுள்ள பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளதாக கூறி பாதியிலேயே சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை சாலை அமைக்கும் பணி தொடங்கவில்லை. தற்போது இந்த பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் பொதுமக்கள் விளைபொருட்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த மண் சாலையும் போக்குவரத்திற்கு தகுதியானதாக இல்லை. இதனை தற்காலிகாக சீரமைக்ககூட வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காந்திகிராமத்திற்கு தார்சாலை பணிகளை முழுமையாக முடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.