மாணவிகள் தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும், அமைச்சர் பாண்டியராஜன் அறிவுரை
மாணவிகள் தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் வி.வி.வி.பெண்கள் கல்லூரியின் 42-வது பட்ட மளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு 1,280 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:-
கடந்த காலங்களில் விவசாய யுகம்மாறி தொழில்யுகம் வந்தது. தொழில்யுகம் மாறி தற்போது தகவல் தொழில் நுட்ப யுகம் நடந்து கொண்டு இருக்கிறது. பிரபல விஞ்ஞானி பிரகலாதிடம் அடுத்து மாறும் யுகங்கள் என்ன என்று கேட்ட போது அவர் ஆளுமை யுகம், புதுமை யுகம், மதிப்பு கூடும் யுகம், தொழில் முனைப்பு யுகம் என்று கூறினார். அதன்படி தற்போது பல்வேறு துறைகளிலும் ஆளுமைத்திறன் மேம்பட்டுள்ளது. தற்போது புதுமையான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.
பரவலாக உள்ள முகநூலை கல்லூரி மாணவர் ஒருவர் தான் உருவாக்கினார். நான் கல்வி அமைச்சராக இருந்த போது நாமக்கல் மாவட்டம் சென்றிருந்தேன். அங்குள்ள அரசு பள்ளியில் 2 மாணவிகளும், ஒரு மாணவரும் சேர்ந்து வீட்டில் உள்ள கழிவு பிளாஸ்டிக் பொருட்களால் ஒரு கழிப்பறையை உருவாக்கி இருந்தனர். அவர்களுக்கு தேசிய அளவில் புதுமை கண்டு பிடிப்புக்காக ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
ஒரு நிறுவனம் என்பது அதன் வரவு-செலவு தொகையை பொறுத்து மதிப்பிடப்படுவது இல்லை. அதன் சொத்து மதிப்பை பொறுத்துதான் மதிப்பீடப்படுகிறது. அமெரிக்காவில் 21 வயது உள்ள ஒரு இளைஞர் தொடங்கி உள்ள ஒரு நிறுவனம் 10 ஆண்டுகளில் 67 மில்லியன் டாலர் மதிப்பை பெற்றுள்ளது. சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் பிறந்த நானும் எனது மனைவியும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை தொடங்கிய போது எங்களது முதலீடு ரூ.60 ஆயிரம் தான். ஒரு சில ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்தது. இதே போன்று தொடங்கப்படும் நிறுவனங்களின் மதிப்பு கூடுவது என்பது தற்போது உள்ள நடைமுறை. இளைஞர்கள் தொழில்முனைவதில் ஆர்வம் காட்டும் நிலை உருவாகி உள்ளது.
பெண்கள் தொழில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. மாநில அரசு பெண் தொழில் முனைவோருக்கு எவ்வித ஜாமீனும் இல்லாமல் ரூ.1 கோடி வரை கடன் உதவி வழங்க தயாராக உள்ளது. இதற்கு முக்கிய தகுதி தொழில் தொடங்கும் பெண்ணின் பெற்றோர் வருமானம் உள்ளவர்களாக இருக்க கூடாது என்பது தான். இங்கு பட்டம் பெற்று செல்லும் மாணவிகள் தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் அரசியல் மட்டும் அல்லாது ஏதாவது ஒரு துறையில் தலைமை பொறுப்பு ஏற்க தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவரது மனைவி லதா, மாறிவரும் உலகில் படித்த பெண்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். விழாவில் கல்லூரி முதல்வர் மீனாராணி வரவேற்று பேசி கல்லூரி செயல் அறிக்கையை சமர்ப்பித்தார். கல்லூரி புரவலர் மகேந்திரன், நிர்வாகக்குழு தலைவர் மாணிக்கவாசகம், துணைத்தலைவர் தெய்வஜோதி, செயலர் ரத்தினவேல், இணைச் செயலாளர் மைதிலி மாணிக்கவாசகம், பொருளாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.