ஓ.பன்னீர்செல்வத்துக்கு உடல்நலக்குறைவு: மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதி.

Update: 2018-03-17 22:30 GMT
மதுரை,

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருமங்கலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் இல்லத்திருமண விழாவுக்காக நேற்று மாலை விமானம் மூலம் மதுரை வந்தார். அவர், அவனியாபுரத்தில் உள்ள முத்துராமலிங்கம் இல்லத்துக்கு சென்று விட்டு, காரில் பெரியகுளம் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்ட அவருக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், சில மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் அவர் அங்கிருந்து அவர் கிளம்பிச்சென்றார்.

மேலும் செய்திகள்