அஜ்ஜூர் கிராமத்தில் 102 பேருக்கு வீட்டுமனை பட்டா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்
அஜ்ஜூர் கிராமத்தில் 102 பேருக்கு வீட்டுமனை பட்டாவை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
ஊட்டி,
ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அஜ்ஜூர் கிராமத்தில், தமிழக அரசின் வருவாய் துறை மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி னார். கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., சாந்தி ராமு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா 102 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசியதாவது:-
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை செம்மையாக செயல்படுத்தி வருகிறது. அனைத்து அரசுத்துறைகளும் மக்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு முக்கியத்துவம் கொடுத்து உதவி செய்கிறது.
பொதுமக்கள் தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, அவர்களது எதிர் காலம் சிறப்பாக அமைய பாடுபட வேண்டும். ஒவ்வொரு துறையிலும் பாடுபட வேண்டும். அஜ்ஜூர் கிராமம் தூய்மையான கிராமமாக உள்ளது.
கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறீர்கள். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.