தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.

Update: 2018-03-17 22:30 GMT
தர்மபுரி,

சென்னையில் நடைபெற்ற தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ரஜினிகாந்த் ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகள் பட்டியலை ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டு உள்ளார். அதன்படி தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளராக பாலக்கோடு முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.மகேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். மாவட்ட இணைசெயலாளராக பி.செந்தில்குமார், துணைசெயலாளர்களாக ஜி. வெங்கடேஷ், எம்.காந்தி, ஜி.ரஜினிகாந்த், இளைஞரணி செயலாளராக ஆர்.ஓம்பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட மகளிரணி செயலாளராக டி.ஜெயகவுசல்யா, இணைசெயலாளராக ஆர்.பானுமதிபெருமாள், வக்கீல்அணி செயலாளராக பி.சுரேஷ், இணைசெயலாளராக எஸ்.பெருமாள், மருத்துவரணி செயலாளராக இ.மோகனசெந்தில், உள்ளிட்ட பல்வேறு நிர்வாகி கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தலா 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி நகரத்திற்கு 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர் எம்.மகேந்திரன் தலைமையில் தர்மபுரியில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கும் பழைய தர்மபுரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக புதிய நிர்வாகிகள் பாலக்கோட்டில் ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரஜினி மன்ற நிர்வாகிகள் சரவணன், வீரப்பன், வைகுந்தன், ரஜினிசிவா, சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்