விசைப்படகை மின்னல் தாக்கியதில் மீனவர் படுகாயம் கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் உயிர் தப்பினர்
சேதுபாவாசத்திரம் அருகே விசைப்படகை மின்னல் தாக்கியதில் மீனவர் படுகாயம் அடைந்தார். மற்றொரு சம்பவத்தில் நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்(வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சுந்தர்ராஜ்(45), நடராஜன்(50), பக்கிரிசாமி(50) ஆகிய 3 பேர் மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுடைய விசைப்படகை மின்னல் தாக்கியது. இதில் பக்கிரிசாமி படுகாயம் அடைந்தார். மேலும் படகில் பற்றிய தீயை மீனவர்கள் உடனடியாக அணைத்தனர். படுகாயம் அடைந்த பக்கிரிசாமிக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள உடையநாடு கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா(58) என்பவருடைய கூரை வீடு அருகே இருந்த தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. அப்போது வீட்டில் இருந்த சகுந்தலா, அவருடைய பேத்தி அகல்யா(15), இளைய மகள் ராஜ்கலா(27) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் ராஜ்கலா நிறைமாத கர்ப்பிணி ஆவார். மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் இருந்த 3 தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. ஒரு மரத்தில் பிளவு ஏற்பட்டு சேதம் அடைந்தது.
தென்னை மரங்களில் இருந்து தீ பரவி சகுந்தலாவின் வீட்டு கூரையில் பற்றாமல் இருப்பதற்காக அக்கம், பக்கத்தினர் கூரை மீது தண்ணீரை ஊற்றினர். மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சகுந்தலாவின் வீட்டில் இருந்த டி.வி., கிரைண்டர் ஆகியவை சேதம் அடைந்தன. வீட்டில் இருந்த மின் விளக்குகள், சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் கீழே விழுந்து உடைந்து சிதறின.