ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-03-16 22:00 GMT
ஈரோடு,

மாநில அரசுக்கு கீழ் பணிபுரியும் டாக்டர்களுக்கு மத்திய அரசின் டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் தனசேகர், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க சட்டப்பிரிவு மாநில செயலாளர் கவுரிசரவணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். 

இதில் அரசு டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்